100% கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்திய நகரம்

இந்தியாவிலேயே 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நகரம் என்ற சாதனையை ஒடிசாவின் புவனேஷ்வர் நகர் நிகழ்த்திக் காட்டியுள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புவனேஸ்வர் நகராட்சி துணை ஆணையர் அன்ஷூமான் ராத், புவனேஸ்வர்…

இந்தியாவிலேயே 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நகரம் என்ற சாதனையை ஒடிசாவின் புவனேஷ்வர் நகர் நிகழ்த்திக் காட்டியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புவனேஸ்வர் நகராட்சி துணை ஆணையர் அன்ஷூமான் ராத், புவனேஸ்வர் நகராட்சியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 9 லட்சத்து 7 ஆயிரம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். நேற்று வரை மொத்தம் 18 லட்சத்து 16 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகக் கூறிய அவர், வெளியூர்களில் இருந்ததால் புவனேஸ்வரைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் புவனேஸ்வரில் பணியாற்றும் வேறு ஊர்களைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறினார். இந்த சாதனைக்குக் காரணமான புவனேஸ்வர் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் புவனேஸ்வர் நகராட்சி துணை ஆணையர் அன்ஷூமான் ராத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.