தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று திருச்செந்தூர் மாணவி துர்கா சாதனை படைத்துள்ளார்.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவைச் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கிலிருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.07% மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்செந்தூர் காஞ்சி சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் துர்கா மட்டுமே தமிழ் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. துர்கா மொத்தம் 448 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அதன்படி, தமிழில் 100, ஆங்கிலத்தில் 96, கணிதத்தில் 87, அறிவியலில் 79, சமூக அறிவியலில் 86 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
இதேபோல மற்ற பாடங்களிலும் பல மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர். அதன்படி, ஆங்கிலத்தில் 45 பேரும், கணக்கு பாடத்தில் 2,186 பேரும், அறிவியலில் பாடத்தில் 3,841 பேரும், சமூக அறிவியலில் பாடத்தில் 1,009 பேரும் 100-க்கு100 பெற்று அசத்தியுள்ளனர்.