முக்கியச் செய்திகள் இந்தியா

குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக கோபாலகிருஷ்ணகாந்தி மறுப்பு

குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகும் வாய்ப்பை ஏற்க மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மறுத்துள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ந்தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக ஜூலை 18ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 15ந்தேதி தொடங்கிய போதும், மத்தியில் ஆளும் பாஜக சார்பிலோ, எதிர்க்கட்சிகள் சார்பிலோ வேட்பாளர் இதுவரை  அறிவிக்கப்படவில்லை

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த வாரம் மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டினார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை களமிறக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின.

இதில் சரத்பவாரும், பரூக் அப்துல்லாவும் ஏற்கனவே அந்த அழைப்பை ஏற்க மறுத்துள்ள நிலையில் தற்போது கோபாலகிருஷ்ண காந்தியும் எதிர்க்கட்சிகளின்  பொது வேட்பாளராகும் வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்த கோபாலகிருஷ்ண காந்தி, தம்மை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறக்க அழைப்பு விடுதத தலைவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்தார். எனினும், அந்த அழைப்பை தம்மால் ஏற்க முடியாது என அவர் மறுப்பு தெரிவித்தார். குடியரசு தலைவர் பதவியை அலங்கரிப்பவர் தேசிய அளவில் கருத்தொற்றுமையுடன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், அது போன்ற சூழலை ஏற்படுத்துவதற்கு  தம்மைவிட தகுதியானவர்கள் பலர் உள்ளதாகவும் கோபாலகிருஷ்ண காந்தி கூறினார். கடந்த 2017ம் ஆண்டு குடியரசு துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக களம் இறங்கி கோபாலகிருஷ்ண காந்தி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

யூரோ கோப்பை தொடரில் இருந்து ரொனால்டோவின் போர்ச்சுக்கல் அணி வெளியேற்றம்

Vandhana

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்

Arivazhagan CM

அரசியல் சுற்றுப்பணத்தை தொடங்கினார் சசிகலா

Halley Karthik