தனியார் நிறுவனத்தில் இரவு உணவு சாப்பிட்டவர்களுக்கு உடல்நல பாதிப்பு-100 பேர் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் பல்லி விழுந்த ரசத்தை சாப்பிட்டதில் 3 தொழிலாளர் மயக்கம்,100 தொழிலாளர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் இந்தோ டெக் என்ற டிரான்ஸ்பார்மர் தயாரிக்கும்…

காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் பல்லி விழுந்த ரசத்தை சாப்பிட்டதில்
3 தொழிலாளர் மயக்கம்,100 தொழிலாளர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே ராஜகுலம் பகுதியில் இந்தோ டெக் என்ற டிரான்ஸ்பார்மர்
தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இரண்டாவது
ஷிப்ட்க்கு 116 பேர் பணிபுரிந்து வந்தனர். இன்று இரவு வழக்கமாக தனியார் நிறுவனம்
சார்பில் நிறுவன தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அனைவரும் வழக்கம் போல் உணவு அருந்திவிட்டு முடிக்கும் தருணத்தில் ரசம் தயாரித்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது.கடைசியாக உணவருந்தியவர்கள் இதனைக் கண்டு காட்டுத்தீ போல அனைத்து
தொழிலாளர்களுக்கும் தகவல்களை தெரிவித்தனர். இதில் முதலில் உணவு அருந்திய
மூன்று தொழிலாளர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அந்த மூன்று நபர்கள் உட்பட
அனைத்து தொழிலாளர்களும் நிறுவனத்தின் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 116 தொழிலாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு காலை வரை தொடர் மருத்துவ கண்காணிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து காஞ்சிபுரம் தாசில்தார் பிரகாஷ், ,காவல் துணை கண்காணிப்பாளர்
ஜூலியஸ் சீசர் ,, தாலுகா காவல் ஆய்வாளர் பிரேம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு
வந்து ஆய்வு செய்தனர். பிறகு மருத்துவமனைக்குச் சென்று அங்கே முதலுதவி
சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கும் பணியாளர்களிடம்
இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு
வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது சம்பவம் தொழிலாளர் மத்தியில்
பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.