ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு மற்றும் புத்தாக்கம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ கடற்கரை புத்துயிர் பெற உள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த வீட்டு வசதித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 17 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மெரினா, எலியட்ஸ் கடற்கரைகள் பிரபலமானவையாக இருந்தாலும், ஏறத்தாழ 20 கடற்கரையோரங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெரினா – கோவளம் இடையே பொழுதுபோக்கிற்காக 22 கடற்கரைகள் அமைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








