31.4 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள்

கபடி போட்டியில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூர் பெரியபுறங்கணி முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சஞ்சய் (எ) விமல்ராஜ். இவர் சேலம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ஆம் ஆண்டு படித்து வந்தார். சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கபடி போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் பங்கேற்ற அவர் விளையாடும்போது கீழே விழுந்தார். அப்போது, எழ முயற்சித்தபோது முடியாமல் மயங்கி விழுந்தார். சக வீரர்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்நிலையில், விமல்ராஜின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவியையும் அறிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

​இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (21) என்ற இளைஞர் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். ​உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

​உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் மூன்று லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading