முக்கியச் செய்திகள் தமிழகம்

மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 முக்கியக் கோரிக்கைகள்

தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி மதுரை திருமங்கலம் தொகுதியின் 10 பிரச்சினைகளின் அடங்கிய பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் மதுரை திருமங்கலம் தொகுதியின் எம்.எல்.ஏ வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

1.எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

2.டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்க டேராபாறை அணை கட்ட வேண்டும்.

3.திருமங்கலம் நகர்ப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க வேண்டும்.

4. திருமங்கலம் நகர்ப் பகுதியில் பேருந்து நிலையம் விரைந்து அமைக்க வேண்டும்.

5.கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும்.

6.உச்சப்பட்டி-தோப்பூர் துணைக்கோள் நகரம் பணியை விரைந்து முடித்து செயல்பட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

7.திருமங்கலம் ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும்.

8.கள்ளிக்குடி ஒன்றியத்தில் குருவாயூர் பகுதியில் உள்ள மக்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய அணை கட்டுதல்.

9.கள்ளிக்குடி ஒன்றியம் சின்ன உலகாணி, கூடக்கோவில், மேல உப்பிலிக்குண்டு பகுதியில் நிரந்தர குடிநீர் மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்திட நிலையூர் நீட்டிப்பு கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

10. திருமங்கலம்- ராஜபாளையம் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பின்னர், செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் செங்கலை காட்டி வாக்கு சேகரித்து வெற்றி பெற்ற திமுக ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. புதுமைப் பெண் திட்டத்திற்காக முதியோர் உதவித் தொகை வழங்குவதை திமுக அரசு நிறுத்தி விட்டது.

தமிழகத்தில் முதியோர் உதவித் தொகை பெறும் 37 இலட்சம் பயனாளிகளுக்கு உதவித் தொகை நிறுத்தப்பட்டது. மதுரைக்கு திமுக அரசு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

மதுரைக்கு நிதி ஒதுக்கீடு செய்து இருந்தால் அதன் பட்டியலை முதல்வர் வெளியிட வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தபட்ட திட்டங்கள் திமுக அரசில் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

முதல்வர் கலைஞர் நூலகம் கட்டுவதில் காட்டும் ஆர்வத்தை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காட்டவில்லை என்றார் உதயகுமார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்த நிலை நீடித்தால் இலங்கையைப் போல் இந்தியா பலவீனமடையும்-ப.சிதம்பரம் எச்சரிக்கை

Web Editor

இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல் – தொடரை கைப்பற்றப்போவது யார்?

EZHILARASAN D

திருப்பூர் மாநகராட்சியில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு மேயரால் பட்ஜெட் தாக்கல்

Arivazhagan Chinnasamy