முக்கியச் செய்திகள் உலகம் செய்திகள்

சென்னையில் இருந்து தோஹாவுக்கு நேரடி விமானம் – ஏர் இந்தியா அறிவிப்பு

சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தோஹாவுக்கு நேரடி விமான சேவையை டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா அறிமுகப்படுத்தவுள்ளது.

இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து தோஹாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் 30ஆம் தேதி முதல் இந்த விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். கத்தாரில் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை நேரில் பார்த்து ரசிக்க விரும்புபவர்களுக்கு இந்த விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த புதிய விமான சேவை சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களை இந்த மாதங்களில் இணைக்கும். மும்பையில் இருந்து வாரத்துக்கு 13 விமானங்களும், ஹைதராபாத்தில் இருந்து வாரத்துக்கு 4 விமானங்களும், சென்னையில் இருந்து வாரத்துக்கு 3 விமானங்களும் கத்தாருக்கு நேரடியாக இயக்கப்படும்.

ஏற்கெனவே தற்போது தில்லிக்கும் கத்தாருக்கும் இடையே அளிக்கப்பட்டு வரும் நேரடி விமான சேவையுடன் கூடுதலாக இந்த விமான சேவையும் அளிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

GOT-ஐ தொடர்ந்து, வருகிறது “ஹவுஸ் ஆப் ட்ராகன்”

EZHILARASAN D

கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் : கிருஷ்ணகிரி இளைஞரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி

Web Editor

இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது- ஆளுநர்

Jayasheeba