முக்கியச் செய்திகள் தமிழகம்

திருமணமான 10 நாட்களில் புதுமணப்பெண் காதலனுடன் ஓட்டம்!

ஓமலூர் அருகே திருமணமான 10 நாளில் பக்கத்து வீட்டு இளைஞருடன் புதுமணப்பெண் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி அருகே மூங்கலேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகள் பூர்ணிமாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி இரவு புதுமணப்பெண் பூர்ணிமா, பக்கத்து வீட்டில் வசித்தவந்த மாரிமுத்து என்பவரின் மகன் அஜித்குமாரை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பூர்ணிமாவும், அஜித்குமாரும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதலை ஏற்காமல்தான், பூர்ணிமாவின் பெற்றோர் வேறு ஒருவருடன் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில், தனது காதலனுடன் பூர்ணிமா ஓடி விட்டதால், ஆத்திரமடைந்த பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம் மற்றும் அவரது உறவினர்கள், அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று, அவரது மினி டெம்போவை தீ வைத்து எரித்தனர். மேலும், அங்கிருந்த வைக்கோல்போருக்கும் தீ வைத்துள்ளனர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், காடையாம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ஆனால், வாகனம் மற்றும் வைக்கோல் போர் முழுமையாக எரிந்து சேதமானது. இதுகுறித்து தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அஜித்குமாரின் தந்தை மாரிமுத்து புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாகனம் மற்றும் வைக்கோல்போரை தீ வைத்து எரித்த பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம், அவரது
உறவினர்கள் சுப்பிரமணி, கணபதி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருமணமான பத்தே நாட்களில் புதுமணப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தனது விவாகரத்து குறித்து மனம் திறந்த பிரபல பாலிவுட் நடிகை மினிஷா லம்பா!

Jeba Arul Robinson

ராஜிவ் நினைவிடத்தில் சோனியா அஞ்சலி

Halley Karthik

இயற்கையை காப்பது நமது பிறப்பிலேயே உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

EZHILARASAN D