மீண்டும் அஜித், விஜய் வைத்து படம் இயக்குவேன் -எஸ்.ஜே. சூர்யா

என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் இல்லை. கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித், விஜய் வைத்து படம் இயக்குவேன் என இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். புஷ்கர் – காய்த்ரி தயாரிப்பில்…

என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் இல்லை. கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித், விஜய் வைத்து படம் இயக்குவேன் என இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.

புஷ்கர் – காய்த்ரி தயாரிப்பில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் வதந்தி இணையத் தொடரின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் உள்ள தாகூர் ஃபில்ம் செண்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நாசர், லைலா, தயாரிப்பாளர் புஷ்கர் காய்த்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எஸ்.ஜே.சூர்யா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தத் தொடரை ஆன்ட்ரியூ லூயிஸ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

அப்போது மேடையில் பேசிய எஸ் ஜே சூர்யா, நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும் என்று சொல்வார்கள். நான் நடிப்பதற்குத் தான் வந்தேன். ஆனால் அது தற்போது தான் அமைந்துள்ளது. என்னுடைய உதவி இயக்குநர் மூலமாக எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் நாட்டில் எத்தனையோ வெப் தொடர்கள் வெளியாகி உள்ளது.

ஒரு பெரிய திரைப்படத்திற்குச் செய்த செலவு இந்த தொடருக்காகச் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்யவே 1 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கும். 170 அல்லது 200 பேர் படப்பிடிப்பு தளத்திலிருந்து இருப்பார்கள். அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் எனக் கூறினார்.

மேலும், நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குப் பெரிய வெறி இருந்தது. என்னுடைய தடைகளை எல்லாம் அடித்து உடைத்து தற்போது அதைக் கடந்து வந்துள்ளேன். திரில்லர் என்றால் நிச்சயம் அதில் பொழுது போக்கு இருக்கும். நான் போராடி விழுந்து எழுந்து மீண்டும் போராடி வந்து தயாரிப்பாளர் ஆகி இந்த கில் பில் திரைப்படத்தில் புதைத்து விடுவார்கள் அல்லவா அது போல தான் நானும் வந்தேன். ஒரு மனுஷன் எவ்வளவு தான் போராடுகிறது என்றார்.

ஒவ்வொரு கைரேகையும் வித்தியாசம் அது போல ஒவ்வொரு மூளையும் வித்தியாசம். சிறந்த இயக்குநர்கள் உடன் குழு சேரும் போது தான் ஒருவர் சிறந்த நடிகராக முடியும். என்னை வைத்து படம் இயக்கவே எனக்கு நேரம் இல்லை. கடவுள் அருள் இருந்தால் மீண்டும் அஜித், விஜய் அடுத்து வைத்து படம் இயக்குவேன் எனவும் அவர் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.