8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாநகராட்சி போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்…

திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாநகராட்சி போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 51 பேரை ஆதரித்து கல்லுக்குளம் மற்றும் கீழவாசல் பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதங்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி உள்ளவரை எந்த கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாக கூறிய அவர், அதிமுக மற்றும் பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக திமுக விளங்குகிறது என குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

இதனை தொடர்ந்து பாபநாசம் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், உங்களைத் தேடி மருத்துவத் திட்டம் மூலம் 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இல்லம் தேடி கல்வி திட்டம், அவசர சிகிச்சை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.