திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சிஏஏ போராட்டம் தொடர்பாக திமுக குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக கூறி…

திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிஏஏ போராட்டம் தொடர்பாக திமுக குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் மீது திமுக பிரமுகர் உமா சங்கர் என்பவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுக தரப்பு தன் மீது தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்ய கோரி மனுதாரர் மாரிதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அண்மைச் செய்தி: 100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தான் அரசியல் விமர்சகர் என்பதால் கருத்து சுதந்திரத்தின் கீழ் பேசி உள்ளதாகவும், புகார் அளித்தவர் தொடர்பாக எதுவும் பேசியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தனக்கு எதிராக திமுக பிரமுகர் வழக்கு தொடர எந்த முகாந்திமும் இல்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, மாரிதாஸ் மீது பதியப்பபட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.