தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும்- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்

உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித் ஓய்வு பெற்றதை  அடுத்து புதிய நீதிபதியாக…

உச்சநீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் தினமும் 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித் ஓய்வு பெற்றதை  அடுத்து புதிய நீதிபதியாக சந்திரசூட் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 9ம் தேதி குடியரசு தலைவர் பதவிபிரமாணம் செய்து வைக்க உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.  இவர் வரும் 2024-ம் ஆண்டு நவம்பர் 10-ந்தேதி வரை பொறுப்பு வகிப்பார்.

இந்நிலையில்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திசூட் புதிய அறிவிப்பு ஒன்றை வழக்கறிஞர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில், உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட 3 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அனைத்து நீதிபதிகளுடனும் ஆலோசனை நடத்திய பிறகு, டிரான்ஸ்பர் செய்ய பட்ட வழக்குகளில் தினமும் 10 வழக்குகளை விசாரிக்க வேண்டும். தற்போது மொத்தம் 13 அமர்வுகள் உள்ளன. இதன்மூலம் தினமும் 130 வழக்குகளையும், வாரத்திற்கு 650 வழக்குகளையும் விசாரிக்க முடியும்.

இதன்படி நடந்தால், குளிர்கால விடுமுறை தொடங்குவதற்கு முன்னர் 5 வாரத்தில் அனைத்து நிலுவை வழக்குகளையும் விசாரித்து முடிக்க முடியும். இதனிடையே ஜாமீன் வழக்குகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனிமனித சுதந்திரம் தொடர்பு உள்ளதால், தினமும் டிராஸ்பர் வழக்குகளை விசாரித்த பிறகு 10 ஜாமீன் வழக்குகளை விசாரிக்க வேண்டும். இதன் பிறகு வழக்கமான பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்று நீதிபதி சந்திரசூட் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.