விவசாயிகள் போராட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று கூடுகிறது மத்திய அமைச்சரவை!

விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள்…

விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி எல்லையில் 14-வது நாளாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply