”விவசாயிகள் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுகிறது”- மத்திய அரசு!

இந்திய விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்த விவகாரத்தை…

இந்திய விவசாயிகளின் போராட்டத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிக்கப்படுவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பாக இந்த விவகாரத்தை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்த போராட்டம் இந்தியாவின் உள்விவகாரம் சார்ந்தது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் மூலம், சில குழுக்கள், இந்தியாவிற்கு எதிராக, சர்வதேச ஆதரவை பெற முயற்சிப்பதாகவும் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சில குழுக்கள் தங்களது கருத்துகளை விவசாயப் போராட்டத்தில் திணித்து விவசாயிகளை திசை திருப்ப முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் சிறிய அளவிலான விவசாயிகளே வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வருவதாகவும், அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வெளியுறவுத்துறை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply