விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தை!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள ,44 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் எல்லைகளில் தங்கியுள்ள விவசாயிகள், டிராக்டர் பேரணியை நடத்தினர். விவசாயிகளின் பேரணியையொட்டி…

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள ,44 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி மாநிலத்தின் எல்லைகளில் தங்கியுள்ள விவசாயிகள், டிராக்டர் பேரணியை நடத்தினர். விவசாயிகளின் பேரணியையொட்டி ஹரியானாவின் குண்லி, மானேசர், பல்வால் ஆகிய தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

பல்வால் மற்றும் காசிப்பூர் வழியாக அலிகார் சாலை வரை டிராக்டரில் பேரணியாக சென்ற விவசாயிகள், பின்னர் காசிப்பூர் திரும்பினர். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினவிழாவின் போது நடத்த திட்டமிட்டுள்ள டிராக்டர் பேரணியின் முன்னோட்டமாக இந்த பேரணியை நடத்தியதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விவசாயிகளுடன் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இன்று 8ம் கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளார். 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் விவசாயிகள் உறுதியாகவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply