தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள திட்பம்பட்டி, ஜமீன் கோட்டாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குள் திறப்பு விழா நடைபெற்றன. இதில் கலந்துகொண்டபின், செய்தியாளர்களை சந்தித்த கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக, 26 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு அளவில் எடுக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் பறவை காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் கூறினார்.







