விமானம் மோசமாக தரையிரங்கியதால் ஓடுபாதை விளக்குகள் சேதம்; விமானிகள் விளக்கமளிக்க டிஜிசிஐ உத்தரவு

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 737 போயிங் விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிரங்கும்போது டயர்கள் சேதமடைந்தது தொடர்பாக விளக்கமளிக்க இந்திய விமான நிலையங்கள் ஆணைய இயங்குநர்கள் உத்தரவிட்டுள்ளார். பெங்களூவில் இருந்து கவுகாத்தி…

ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் 737 போயிங் விமானம் அசாம் மாநிலம் கவுகாத்தி விமான நிலையத்தில் தரையிரங்கும்போது டயர்கள் சேதமடைந்தது தொடர்பாக விளக்கமளிக்க இந்திய விமான நிலையங்கள் ஆணைய இயங்குநர்கள் உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூவில் இருந்து கவுகாத்தி சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் கவுகாத்தியில் தரையிரங்கும்போது, ஓடுபாதையில் நிற்காமல், சற்று தள்ளி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தை தரையிறக்கும்போது, விமானத்தின் முன்பக்க சக்கரங்கள் சேதமடைந்தன. விமானத்தின் சக்கரங்கள் சேதமடைந்ததை கண்டறிந்த விமானி, விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தாமல், தள்ளி நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஓடுபாதையில் உள்ள மூன்று விளக்குகளும் சேதமடைந்துள்ளன. இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் நான்கு கேபின் குழுவினர் உட்பட 155 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அந்த விமானம் 737 போயிங் வகையைச் சேர்ந்ததாகும். ஏற்கெனவே போயிங் விமானங்கள் விபத்தை சந்தித்து வரும் நிலையில், கவுகாத்தி நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply