வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரகானே!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 82 ரன்கள் எடுத்து முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி கேப்டன் ரகானேவின் ஆட்டத்தை அனைத்து தரப்பினரும்…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 82 ரன்கள் எடுத்து முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி கேப்டன் ரகானேவின் ஆட்டத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை ஒரு தனிமனிதனை கொண்டாடும் வழக்கம் கபில்தேவ் தொடங்கி கோலிவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் நிதர்சனமான உண்மை அதுவல்ல, கிரிக்கெட்டில் அணியில் உள்ள அனைவரின் செயல்பாடுகளை பொறுத்துதான் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. இன்றளவும் நம்மில் சிலர் எனக்கு இவரை தவிர வேறு யாரையும் பிடிக்காது என வரையறுத்து வைத்திருப்போம். அவரை தாண்டி வேறு யாரையும் கொண்டாட மன எத்தனிப்பதில்லை. விராட் கோலி தனது சொந்த காரணமாக ஆஸ்திரேலியா அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இந்தியா திரும்புகிறார். அணியை யார் நிர்வகிப்பது என்று சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில், BCCI ரகானேவை தேர்வு செய்தது.

ஆரம்பகாலத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே சில ஆண்டுகள் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். பின் IPL அணிகளுக்காக விளையாடினார் அதிலும் நிலையாக ஒரு அணியில் இடம்பிடிக்க முடிவில்லை. பின் இந்திய டெஸ்ட் அணியில் களமிறக்கப்பட்ட அவர், கோலியின் வெற்றிடத்திற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அணியை அவர் நிர்வகிக்க சரியான நபரா என்ற கேள்வியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் ரகானேவை நான் அருகிலிருந்து பார்த்துள்ளேன் அவர் மிகவும் நுணுக்கமாக ஆடக்கூடிய அற்புதமான வீரர். அவர் ஆளுமை தன்மை கட்டாயம் அபாரமாக இருக்கும் என தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அவர் வாக்கை உண்மையிலே மெய்ப்பித்துள்ளார் ரகானே.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. “பாக்சிங் டே டெஸ்ட்” என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. பந்து வீச்சாளர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தி ஒரே நாளில் அனைத்து விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டது.

பின்பு விளையாடிய இந்திய அணி, முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது. இந்நிலையில், போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் நிதானத்துடன் விளையாடி வந்தனர். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரஹானே 12வது முறையாக 100 ரன்களை கடந்துள்ளார். 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன்களை எடுத்துள்ளது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா பெற்றதைவிட 82 ரன்கள் கூடுதல் ஆகும். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், கேப்டன் ரஹானே 102 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 40 ரன்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்திய அணி வெற்றி தோல்வி என்பதை தாண்டி யாரையும் நம்பி ஒரு அணி கிடையாது என்பதை நிரூபித்துள்ளார் ரகானே.அணியை நிர்வகிப்பதிலும், தனது பங்களிப்பையும் சிறப்பாக அளித்துள்ளார். ஆளுமைகள் உருவாக்கப்படுவதில்லை, உருவாகி கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல முடியும். தனக்கான வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்தி வரும் ரகானேவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply