
மமதா பானர்ஜியின் அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் 6 மாதத்தில் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் திரிணாமுல் காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் மமதா பானர்ஜி தலைமையிலான மேற்குவங்க அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி பதவியை ராஜினாமா செய்துள்ளார். கூச் பெஹர் தொகுதி எம்.எல்.ஏவான மிஹிர் கோஸ்வாமி மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோர் இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.







