
டயரால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கு, மாணவர்கள் சிலர் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் எளிதில் மாசுபடுகிறது. இதனால் மனிதர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில் கார், பைக்குகளுக்கான டயர்களை தயாரிக்கும் போது சிறிய சிறிய பிளாஸ்டிக் துகள்கள் அதிக அளவில் வெளியேறுகின்றன. இவை பெரும்பாலும் காற்றில் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில் லண்டனை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் இணைந்து இதற்கான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். இவர்கள் பிரிட்டன், ஹாங்காங், இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள். டயர் தயாரிக்கும் போது வீணாக வெளியேறும் பிளாஸ்டிக்குகளை சேகரிக்கும் வகையில் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். தினமும் காலையில் மாசான காற்றை பார்க்கும் போது வேதனையாக இருக்கும் என இந்தியாவை சேர்ந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசான காற்றை விட இந்த டயர் துகள்கள் 1,000 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் துகள்களை மறுசுழற்சி செய்து மை மற்றும் முடிக்கு பயன்படுத்தும் டை தயாரிக்க பயன்படுத்துகின்றனர். இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த புதிய ஐடியாவுக்காக மாணவர்களுக்கு விருதுகளும் கிடைத்துள்ளன.







