
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பில் நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக வீதியோரம் மா, தேக்கு, வேம்பு, புங்கன், செம்மரம், தைலம் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் உள்ளன. இந்நிலையில் நிவர் புயலை பயன்படுத்தி குடியிருப்பு வளாகத்தில் இருந்த 40 மரங்களை பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வேறோடு பிடுங்கப்பட்டுள்ளது.
இந்த மரங்கள் திடீரென வேரோடு பிடுங்கி, வெட்டப்பட்டது வேதனையளிப்பதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அரசு சார்பில் மரம் வளர்க்க ஊக்கப்படுத்தி வரும் நிலையில், வளர்ந்த மரங்களை புயல் காரணமாக காட்டி அதனை அடியோடு பிடுங்கி உள்ள செயல் கண்டிக்கத்தக்கது என கூறினர். எனவே, இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







