மின்வயர் அறுந்து விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாப பலி!

காஞ்சிபுரம் அருகே மின்சார வயரை பழுது பார்க்க சென்ற மின்வாரிய ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் மின்சார வயர் துண்டிக்க பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு…

காஞ்சிபுரம் அருகே மின்சார வயரை பழுது பார்க்க சென்ற மின்வாரிய ஊழியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் மின்சார வயர் துண்டிக்க பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதையெடுத்து, மின்சார வாரிய ஊழியர் பாக்கியநாதன் மற்றும் அவரது உதவிக்காக தயாளன் என்பவரும் சென்றார்.

அப்போது மின்சார வயரில் இருந்த மின்சாரம் வயல்வெளி முழுவதும் பரவி இருந்த நிலையில், பாக்கியநாதன், தயாளன் ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply