பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டடப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர்…

பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வேளாண் விரிவாக்க மைய கட்டடப் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை வைத்து தேர்ச்சி அறிவிக்கப்பட்டது என்றும், இந்தாண்டு நிலைமை வேறு எனவும் கூறினார். தற்போதைய அதிமுக ஆட்சி மே 24 ம் தேதி முடிவடைவதால் அதற்கு முன் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து நல்ல முடிவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தாண்டு 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், ஆலயங்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது என்றும் குறிப்பிட்டார். விவசாயிகள், தொழிலதிபர்கள், மாணவர்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply