சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநாடு படத்தில் அதிரசியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் சிம்பு அதிரடியா சமூகவலைதளமான ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் களமிறங்கி சமீபகாலமாக தன்னை பற்றி மற்றும் படம் பற்றி updateகளை வெளியிட்டு வருகிறார். பீஃப்சாங், காதல், ஜல்லிக்கட்டு போராட்டம், நடிகர் சங்க தேர்தல், பெரியார் குத்து பாடல், அவரது தம்பு திருமணம், பின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியோடு பிரச்சனை என அனைத்து பிரச்சனையையும் தாண்டி, ஒரு வழியாக கடந்த மாதம் ஈஸ்வரன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்து கொடுத்துவிட்டு மாநாட்டில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையன்று திரையரங்குகளில் ஈஸ்வரன் திரைப்படம் நிச்சயம் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.







