பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பட்ஜெட் குறித்து, தொழில்துறை, சேவைத்துறை மற்றும் வர்த்தகத்துறை நிபுணர்களுடன்…

2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் குறித்து, தொழில்துறை, சேவைத்துறை மற்றும் வர்த்தகத்துறை நிபுணர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களாக தொடர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக சுகாதாரத்துறை பெரும் சவால்களை சந்தித்துள்ள நிலையில், வருகிற பட்ஜெட்டில் சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் முதலீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு அடுத்த ஆண்டு பட்ஜெட் சிறப்பாக இருக்கும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply