புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சுற்றுசூழல் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, புதிய நாடாளுமன்றம் கட்டும் பணிகளை தொடங்க தடையில்லை என்றும் அரசாணை செல்லும் என்பதை உறுதிபடுத்துவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடம் அமையவுள்ள பகுதிகளில் காற்று மாசை கட்டுப்படுத்த சுத்திகரிப்பு கோபுரம் அமைக்க வேண்டும் என சுற்றுசூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டனர். அதேபோல், வரும் காலங்களில் இது போன்ற திட்டம் செயல்படுத்தும்போதும் சுத்திகரிப்பு கோபுரம் அமைப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.







