புதிய வசதியுடன் வாட்ஸ் ஆப் பிங்க் என்ற மேம்படுத்தப்பட்ட செயலி வெளியாகி உள்ளதாக, பயனர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் வாட்ஸ் ஆப் பிங்க் நிறமாக மாறி வருவதாக தகவல்கள் வெளிவந்தது. வாட்ஸ் ஆப் பிங்க் நிறத்தில் மாறியதும், உங்களது தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள், ஒடிபி உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாதுகாப்புடன் இருப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மும்பை சைபர் கிரைம் போலீசார் ட்விட்டர் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டுள்ளது.
பயனாளர்கள் கூகுள் பிளே ஸ்டோர், ஐ ஸ்டோர் போன்ற தளங்களில் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தில் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.








