சென்னை அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை புழல் அடுத்த புத்தகரத்தில் ஷீரடிபுரம் தியான பீடம் உள்ளது. இதை பத்மாவதி நகரைச் சேர்ந்த சங்கர நாராயணனும் அவரது மனைவி புஷ்பாவும் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு தியான பீடத்திற்கு வந்த 17 வயது பள்ளி மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சங்கர நாராயணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த மாணவிக்கு திருமணம் ஆன நிலையில் அவரின் கணவர் வெளிநாடு சென்றுள்ளார். இதை அறிந்த சங்கர நாராயணன், ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் சாமியாரும் அவரது மனைவியும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






