பள்ளி மாணவியை உயிரிழப்புக்கு தூண்டிய இளைஞர் கைது!

விழுப்புரம் அருகே பள்ளி மாணவியைஉயிரிழப்புக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தை அடுத்த வைலாமூர் பகுதியை 9 வகுப்பு பள்ளி மாணவி கானைபகுதியில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்தியன் வங்கி…

விழுப்புரம் அருகே பள்ளி மாணவியைஉயிரிழப்புக்கு தூண்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தை அடுத்த வைலாமூர் பகுதியை 9 வகுப்பு பள்ளி மாணவி கானைபகுதியில் டியூஷனுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இந்தியன் வங்கி அருகே வந்துகொண்டிருந்த மாணவியின் கையை அதே பகுதியைச் சேர்ந்த பகுதியை சார்ந்த நரசிம்மராவ் என்ற இளைஞர் பிடித்து இழுத்து புத்தகங்களை பிடிங்கி கொண்டு தாகத வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதனால் அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவி விஷமருந்தி உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தங்களது மகளிடம் தகாத வார்தையில் பேசி உயிரிழப்புக்கு துண்டிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில்உயிரிழப்புக்கு தூண்டியதாக இளைஞர் நரசிம்மராவ் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply