பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.…

தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் சார்பில் சங்க நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசை பொருத்தவரையில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தேர்வை நடத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply