நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவுள்ள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியில் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் நடைபெறும் என விவசாயிகள் சங்கங்கள் அறிவித்திருந்தன. இதற்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் முழு அடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள பாரத் பந்தால் தமிழக மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் பாதிப்படையாமல் இருக்கவும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உள்ள அனைத்து காவலரும் பணிக்கு வர வரவேண்டும் என காவல்துறை சார்பில் அறிவித்துள்ளனர்.
அதேபோல் நாளை தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள முழு அடைப்பை யொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதேபோல், குறிப்பாக சென்னையில் 7000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.







