தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி!

நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். குன்னூர் வழியாக சென்ற கனிமொழி எம்.பி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தார். அவரிடம், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள்…

நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

குன்னூர் வழியாக சென்ற கனிமொழி எம்.பி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தார். அவரிடம், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்தி தருமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து காளான் உற்பத்தி செய்யும் குடில்களுக்கு சென்று உற்பத்தி செய்யப்படும் நிலவரம் குறித்து கனிமொழி எம்.பி கேட்டறிந்தார். தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை திமுக தலைவர் ஸ்டாலினிடம் எடுத்துக்கூறி விரைவில் அதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply