ரஜினி அரசியல் வருகை: முதல்வர் பழனிசாமி கருத்து

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை பதிவு செய்த பின்னர், அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சிவகங்கையில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி,…

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை பதிவு செய்த பின்னர், அதுகுறித்து கருத்து தெரிவிக்கலாம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், சிவகங்கை மாவட்ட மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா மத்தியில் தான் அங்கம் வகிக்கும் கட்சி ஆட்சியில் இருந்தபோதே ஊழல் செய்து சிறைக்கு சென்றவர் என சாடினார். யார் ஊழல் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும் என்றும் காட்டமாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply