செய்திகள்

மீண்டும் தடம் பதித்த நடராஜன்: இந்திய அணி வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்ஹ்டிலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிதானமாக ஆடிய கே.எல்.ராகுல் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி நேரத்தில், அதிரடி காட்டிய ரவீந்திர ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 161 ரன்கள் குவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இந்திய அணியின் நேர்த்தியான பந்துவீச்சால் சீரான இடைவெளியில் அந்த அணி விக்கெட்டுகளை இழந்தது. சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன், 4 ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். யஸ்வேந்திர சாஹலும் 3 விக்கெட் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ராமன் இருப்பதை நம்பாதவர்கள் ராவணனை பற்றி பேசுகிறார்கள்- காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி பதிலடி

Web Editor

மணிப்பூரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.5ஆக பதிவு

Web Editor

மகளிருக்கான ஆசிய கோப்பை : இலங்கையை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

EZHILARASAN D

Leave a Reply