திருவாரூர் மாவட்டத்தில் சூறாவளியால் சேதமடைந்த பருத்தி பயிர்கள்!

திருவாரூர் மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளி காற்று மற்றும் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரடப்பட்டிருந்த பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும்…

திருவாரூர் மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளி காற்று மற்றும் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரடப்பட்டிருந்த பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. தென்மேற்கு பருவ மழை தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென வீசிய சூறாவளி காற்று மற்றும் மழையினால் மாவட்டம் முழவதும் சுமார் 10ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.

ஏற்கனவே கடந்த மாதம் பெய்த கனமழையால் சுமார் 41 ஏக்கர் பருத்தி வேர்கள்
தண்ணீரில் மூழ்கி நாசமானது குறிப்பிடத்தக்கதாகும். அந்த இழப்பீலிருந்து தற்போதுதான் விவசாயிகள் மெல்ல மீண்டு வந்துகொண்டிருந்தனர்.அதற்குள் இந்த சம்பவம் அவர்களை நிலைகுலைய செய்துள்ளது.

ஏக்கர் 30ஆயிரம் வரை செலவு செய்து விளைச்சலை பார்க்கும் நேரத்தில் பருத்தி பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடந்துள்ளனர்.சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.