தனியார் நிறுவனத்துக்கு வாடகைக்கு விடப்படும் நீலகிரி மலை ரயில்!

நீலகிரி மலை ரயிலை தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கவுள்ளதால், அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே நீராவி இன்ஜின், மற்றும் குன்னூர் – உதகை இடையே,…

நீலகிரி மலை ரயிலை தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கவுள்ளதால், அதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்றது.

குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே நீராவி இன்ஜின், மற்றும் குன்னூர் – உதகை இடையே, டீசல் இன்ஜின் மூலம் மலை ரயில் இயக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல், மலை ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மலை ரயிலை சுற்றுலா பயணிகள் சிலர், வாடகைக்கு எடுத்து பயணம் மேற்கொள்ள உள்ளதால், மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே சோதனை ஓட்டம் நடைபெற்றது.

இதில் ரயில் பாதைகள் சீராக இருப்பதால் வரும்5ம் தேதி முதல் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கப்படுவதில் சிக்கல்கள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply