தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மாணவி!

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் தந்தை இறந்த துக்கத்திலும் இறுதி சடங்கில் பங்கேற்காமல் கண்ணீரோடு பொதுத் தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6…

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் தந்தை இறந்த துக்கத்திலும்
இறுதி சடங்கில் பங்கேற்காமல் கண்ணீரோடு பொதுத் தேர்வு எழுதிய மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி
நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் கல்வி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட தேர்வு மையத்தில்
மாணவ மாணவியர் ஆர்வமுடன் தேர்வு எழுதினர்

இந்நிலையில் பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜோதிலிங்கம் (40) கட்டிட கூலி
வேலை செய்து வந்த இவருக்கு கடந்த 6 மாதங்களாக மஞ்சள் காமாலை இருந்து வந்ததாக
கூறப்படுகிறது இந்நிலையில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மாலை செங்கல்பட்டு அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜோதிலிங்கம் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.

ஜோதிலிங்கத்தின் ஒரே மகள் விஷாலினி ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு வரும் போதே கண்களில் கண்ணீரோடு சோகமாக வந்தவரிடம் சக மாணவிகள்  விவரம் கேட்கவே தனது தந்தை இறந்த தகவலை கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
தந்தை இறந்த துக்கத்திலும் இறுதி சடங்கில் பங்கேற்காமல் பொதுத் தேர்வு எழுத
வந்த விஷாலினி கண்களில் கண்ணீரோடு தேர்வு மையத்திற்கு வந்தது சக மாணவிகளிடையே நெகிழ்ச்சியை எற்படுத்தியது.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை
வெளியானது இதில் பிள்ளைப்பாக்கம் பகுதியை சேர்ந்த விசாலினி 500க்கு 275
மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.நன்றாக படித்து வந்த மாணவி தன் தந்தை இறந்த துக்கத்தில் தனது படிப்பில் கவனம் செலுத்த முடியாததால் மதிப்பெண் குறைவானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.