ஆம்பூரை அடுத்த சின்னப்பமலை அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையையொட்டி, நூற்றுக்கணக்கான பெண்கள் திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பார்சனபல்லி சென்னப்பமலை அருள்மிகு
ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு தொடர்ந்து ஒரு வார
காலமாக சுற்றுவட்டாரத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, புஷ்பக் காவடி, பன்னீர் காவடி என பல்வேறு வகையான காவடிகள் எடுத்து வந்து சாத்துபடி செய்து வரும் நிலையில் ஆலய வளாகத்தில் மழை வேண்டியும், சுப்பிரமணியர் மற்றும் அஷ்டலட்சுமிகள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற திருவிளக்கு பூஜை செய்தும் வழிபட்டனர். பின்னர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர்- க்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபாடு மேற்கொண்டனர்
ரூபி.காமராஜ்







