சூரப்பாவிற்கு கமல்ஹாசன் ஆதரவு!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி…

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்தற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். யாரோ ஒருவர் எழுதிய மொட்டை கடுதாசி அடிப்படையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல்வேறு கேள்விகளையும் கமல்ஹாசன் எழுப்பி உள்ளார். சகாயம் தொடங்கி சந்தோஷ் பாபு வரை இவர்களால் வேட்டையாடபட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என கூறியுள்ள கமல், ஒருவர் நேர்மைக்காக வேட்டையாடப்பட்டால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன் என்றும் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply