புரெவி புயலால் கடும்பாதிப்புக்குள்ளான யாழ்ப்பாணம்!

புரெவி புயலால் யாழ்ப்பாண மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் திரிகோண மலைக்கும், பருத்தி துறைக்கும் இடையே புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் கரை கடந்தது.…

புரெவி புயலால் யாழ்ப்பாண மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கையில் திரிகோண மலைக்கும், பருத்தி துறைக்கும் இடையே புதன் கிழமை இரவு 11.30 மணியளவில் கரை கடந்தது.

புயல் கரை கடந்த பின்னும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களூக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை நீடிக்கும்பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் அதிக வெள்ளம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால், அப்பகுதி மக்களை பாதுகாக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply