சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக ரஜினிகாந்த் மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சுனாமி தாக்கியதன் 16ஆம் ஆண்டு நினைவு தினம் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் நடைபெற்றது. இதில், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்திப்பதாக கூறினார்.
மருத்துவமனையில் இருந்து ரஜினி திரும்பிய பிறகு, அவர் அறிவித்தபடி, அனைத்தும் நடக்கும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். நல்லவர்களுக்கு மாணிக்கமாக செயல்படும் ரஜினிகாந்த், விரைவில் அரசியல் கட்சி தொடங்கி, சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக மாணிக் பாட்ஷாவாக வெகுண்டெழுவார் என கூறினார்.







