கொரோனா காலத்தில் மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உருவெடுத்தவர் நடிகர் சோனு சூட். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்து அவர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். அதோடு நிறுத்தி விடாமல் சமூக வலைதளங்கள் மூலம் உதவி கேட்பவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார். அவருக்கு பலரும் நன்றியை தெரிவித்து வருகின்றனர். அவரது சேவையை பாராட்டும் வகையில் சிலர் தங்கள் கடைக்கு அவரது பெயரை வைத்துள்ளனர்.
அந்தவகையில் தெலங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது சாலையோர கடைக்கு நடிகர் சோனு சூட் பெயரை வைத்துள்ளார். இது சமூக வலைதளங்கள் மூலம் சோனு சூட் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து அந்தக் கடையை தேடிக் கண்டுபிடித்து கடைக்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சோனு சூட். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அங்கு தன்னைக் காண வந்த ரசிகர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அவரது செயல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.







