திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் கொட்டப்படும் பல்வேறு கழிவுகளால் துர்நாற்றம் பரவி வருகிறது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை தடுக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உபயோகப்படுத்தப்பட்ட மருத்துவ ஊசிகள், மருத்துவமனையில் காயங்களுக்கு பயன்படுத்தப்பட்ட பஞ்சுகள் துணிகள், காலாவதியான மருந்து பாட்டில்கள் மற்றும் மருந்துகள்,மேலும் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளின் இறைச்சி கழிவுகள், முடிதிருத்தம் கடைகளின் கழிவுகள் என பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர். சாலையை கடக்க போது துர்நாற்றத்தை சுவாசித்தவாறு செல்வதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே அந்தப் பகுதிகளில் சாலை ஓரம் கொட்டப்படும் கழிவுகளை தடுக்க
மாவட்ட சுகாதாரத்துறை தவறி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி
வருகின்றனர். மேலும் கண்ணமங்கலம் பகுதியில் நிலவும் கழிவுகளை சாலை ஓரம் கொட்டுவதை பேரூராட்சி நிர்வாகம் தடுத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.







