மயிலாடுதுறை அருகே அரசு மதுபானக்கடையில் சயனைடு கலந்து மதுபானம் அருந்திய 2 பேர் உயிரிழந்தனர்.
மயிலாடுதுறை தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்கள்.
மர்மமான மரணம் குறித்து மயிலாடுதுறை ஏடிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், டாஸ்மார்க் மதுபானம் அருந்தியதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து உயிரிழந்த பழனி குருநாதனின் உறவினர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சம்பவ இடத்தில் அரசு மதுபான கடையில் இரண்டு குவாட்டர் பாட்டில்கள் இருந்ததாகவும், அதில் ஒரு பாட்டில் பாதி சாப்பிட்ட நிலையில் இருந்தது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை சென்று பார்த்த போது அதன் அருகில் இருந்த மதுபான பாட்டில்களை அங்கு வந்த பெரம்பூர் உளவு பிரிவு காவலர் பிரபாகரன் என்பவரிடம் கொடுத்ததாக கூறினார்.
இந்நிலையில் உயிரிழந்த இருவரின் உடலும் உடற்கூறு ஆய்விற்காக வாகனம் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் நேற்று தடயை அறிவியல் சோதனை நடைபெற்றது. இதில் குடிக்காமல் இருந்த ஒரு மது பாட்டிலில் சயனிடு விஷம் கலக்கப்பட்டு இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைபேசி மூலம் அவர் அளித்த தகவலில், ஒரு பாட்டிலில் சயனைடு விஷம் இருந்ததாகவும் அதனால் அவர்கள் சயனைடு விஷம் கலந்த மதுவை குடித்ததால் உயிரிழந்திருக்கலாம் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை பிறகே முழு விபரங்கள் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.







