சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தகவல்!

சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், திருச்சியில் இன்று செய்தியாளர்களை…

சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியுள்ள கமல்ஹாசன், திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்ற அவர், விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களின் பங்களிப்பு வேண்டும் என்றார். மேலும், வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply