மது பாட்டிலால் கழுத்தறுக்கப்பட்டு இளைஞர் கொலை; திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரங்கேறிய கொடூரம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 27 வயது வாலிபர் மது பாட்டிலால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த தெற்கு பாளையம் பிரிவு அருகே இன்று காலை…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 27 வயது வாலிபர் மது பாட்டிலால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த தெற்கு பாளையம் பிரிவு அருகே இன்று காலை சாலை ஓரமாக வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பல்லடம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த சம்பவ இடம் வந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதல்கட்ட விசாரணையில் இறந்த வாலிபர் மானாமதுரை சேர்ந்த முருகன் என்பதும் வயது 27 என்பதும் தெரியவந்தது. மேலும் இவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பல்லடம் டிஎஸ்பி ஸ்ரீராமச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் நடந்த தகராறில் வாலிபர் மது பாட்டிலால் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டது தெரியவந்துள்ளது.

பின்னர் மோப்பநாய் வெற்றி வரவழைக்கப்பட்டு சோதனை செய்தனர். வெற்றி சுமார் 1கிலோ மீட்டர் தொலைவில் ஒரு தோட்டத்திற்கு சென்று நின்றது. அங்குள்ளவர்களிடம் கொலை செய்ய பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தடயவில் நிபுணர்கள் சம்ப இடத்திற்கு வந்து ஆதாரங்களை சேகரித்தனர். பின்னர் வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பல்லடம், திருப்பூர் பிரதான சாலையோரமாக கழுத்தறுபட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் அப்பகுதியில் கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply