கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களுக்கு மும்மடங்கு ஊதிய உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களின் ஊதியத்தை மும்மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோயில்களில் பணிபுரியும் இசைக் கலைஞர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில்,…

கோயில்களில் பணியாற்றும் இசைக் கலைஞர்களின் ஊதியத்தை மும்மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோயில்களில் பணிபுரியும் இசைக் கலைஞர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்களால் பாடப்பெற்ற திருக்கோயில்களில் பணிபுரியும் நாதஸ்வரம், தவில், தாளம் போன்ற இசைக் கலைஞர்களுக்கு மாத ஊதியத் தொகையை மும்மடங்காக உயரத்தி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி நாதஸ்வர கலைஞர்களுக்கு மாத ஊதியம் 1,500 ரூபாயிலிருந்து 4,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தவில் கலைஞர்களுக்கான மாத ஊதியம் 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. தாளம் கலைஞர்களின் மாத ஊதியம் 750 ரூபாயில் இருந்து 2,250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், ஊதிய உயர்வு நவம்பர் மாதம் ஊதியத்தில் இருந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply