கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று அகஸ்தியர் அருவிக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க குவிந்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும், இது ஒரு ஆன்மீக அருவியாக இருப்பதாலும் இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கத்திரி வெயில் தொடங்கி வெப்பம் அதிகரித்து
வருவதால் கோடை வெப்பத்தை தணிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து
வருகிறது.
தொடர்ந்து அகஸ்தியர் அருவியில் குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் ஆனந்த
குளியலிட்டு கோடை வெயிலின் தாக்கத்தை சுற்றுலா பயணிகள் தணித்து வருகின்றனர்








