முக்கியச் செய்திகள்தமிழகம்

4K சினிமா தரத்தில் விலங்குகளை காண்க; வண்டலூர் உயிரியல் பூங்கா வீடியோவை பகிர்ந்த விஜய் சேதுபதி!

4K சினிமாத் தரத்தில் உள்ள விலங்குகளை காண்க என தனது ட்விட்டர் கணக்கில் வண்டலூர் உயிரியல் பூங்கா வீடியோவை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே தேர்வுகள் நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா தளங்களுக்கு மக்கள் குடும்பம் குடும்பமாக படையெடுத்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னையை பொறுத்தவரை மெரினா கடற்கரை, கோவளம் கடற்கரை, முட்டுக்காடு போட்டிங் ஹவுஸ், எம்.ஜி.எம்., வி.ஜி.பி., ஆகிய பொழுதுபோக்கு அம்சங்கள் வரிசையில் சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தளமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது

வண்டலூர் அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 180 வகையான 2500க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் ஒன்றாக இருப்பது வண்டலூர் உயிரியல் பூங்கா தான்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம்.

இந்த ஆண்டும் அதே போல, சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவிற்க்கு படையெடுக்க தொடங்கினர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வண்டலூர் உயிரியல் பூங்கா சமந்தமான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவின் (AAZP) மிருகக்காட்சிசாலையில் “கலர்ஸ் ஆஃப் ஏஏஇசட்பி” – 4K சினிமாத் தரத்தில் உள்ள விலங்குகளை காண்க. என ஒரு யூடியூப் லின்க்கையும் கொடுத்துள்ளார்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

படப்பிடிப்பே துவங்காத நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படம் செய்த சாதனை

EZHILARASAN D

”ஹமாஸ் படையினரின் தாக்குதல் குறித்த எங்கள் எச்சரிக்கையை இஸ்ரேல் நிராகரித்துவிட்டது!” – எகிப்து உளவுத் துறை அதிர்ச்சி தகவல்!

Web Editor

பாரதத்தின் பழமையான கலாச்சாரம் நிறைந்த பகுதி தமிழ்நாடு: ஆளுநர்

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading